ஆலோசனைக்குழு உலோபிகள், கோழைகள், பேராசைக்காரர்கள் முதலிய யாருடனும் ஆலோசனை நடத்தாதீர். உலோபிகள் வறுமையையும் பொருளாதார நெருக்கடியையும் காட்டி நேர்மையை ஒத்திப்போடச் சொல்வார்கள். கோழைகளின் நிலை இன்னும் மோசமானது. உமது துணிவை அவர்கள் துண்டித்து விடுவார்கள். பேராசைக்காரர்களைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? பணத்தில் மட்டுமின்றி, இன்பத்திலும் அவர்கள் பேராசை வைத்திருக்கிறார்கள். நீதி, அநீதி என்று பார்க்காமல் – நல்வழி, முரண்வழி என்று கவனிக்காமல், கிடைக்கும் இன்பங்களையெல்லாம் அனுபவித்துவிட வேண்டும் என்ற அவர்களின் கொள்கையை நீர் என்றைக்கும் ஆதரிக்கக்
Secret
Wisdom